jail

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுதப்பட்டபோதே நீதிவான் அவர்கள‍ை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*