China and USA relationship.
China and USA relationship.

இலங்கைத் தேர்தல் களத்தில் அதிக பணம் செலவிட்டது அமெரிக்காவா? சீனாவா?!

தமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளதாகவும், பணம் கொடுத்தவர்களே இதனை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள சினிமா கலைஞரான ரோய் டி சில்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீனா 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியதாக அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி பூதாகரமாகியுள்ளது.

இச்செய்தியை மறுத்து அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மஹிந்த, ”எமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா நிதியுதவி செய்துள்ளது. எமது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா 600 மில்லியன் செலவழித்ததாக, பணம் வழங்கிய அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியே தெரிவித்துள்ளார்.

ஆனால், இது தொடர்பாக எவரும் கருத்துக்களை கூறவோ நடவடிக்கைகளை எடுப்பதாகவோ இல்லை. அதுமட்டுமின்றி, தமது ஏனைய குற்றங்களை மறைக்கவே அமெரிக்க ஊடகத் தகவலை அனைவரும் பெரிதுபடுத்துகிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*