TNA

மாகாணசபைத் தேர்தலை தாமதிக்காது நடத்துமாறு கூட்டமைப்பு கோரிக்கையாம்

மாகாண சபைத் தேர்தல் இன்னும் தாமதிக்காது, புதிய முறையில் அல்லது பழைய முறையிலேனும் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ”எதிர்வரும் இரு மாதங்களுக்குள் புதிய தேர்தல் முறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, பதவிக்காலம் நிறைவடைந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இல்லையேல் பழைய முறையிலேனும் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

உடனடியாக தேர்தலை நடத்துவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இன்னும் ஒரு அல்லது இரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த முடியாவிடின் பழைய முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*