thavarasa

வடக்கு முதல்வர் கௌரவமாக பதவி விலகவேண்டும் என்கிறார் தவராசா!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை விட்டு கௌரவமாக விலக வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம் நேற்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று முதலமைச்சர் கௌரவமாக பதவி விலக வேண்டும். மாகாண சபைக்குரிய அதிகார வரம்பு எல்லைகள் என்பது கூட தெரியாமல் தான் அவர் முதலமைச்சராகப் பதவி வகிக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*