ranil

துறைமுகத்தை சீனா கோரவில்லை என்கிறார் ரணில்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பலவந்தப்படுத்தப்பட்டதாக அண்மையில் நியூயோர்க் டைம்ஸில் வெளியான செய்தியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சமன் கெலேகம ஞாபகார்த்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

‘இவ்விடயத்துக்காக நாம் எவ்வாறு பலவந்தப்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பில் நிறைய எழுதப்பட்டுள்ளபோதும், இதில் எமது தேவைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவே நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப் பேச்சுவார்த்தைக்கு நான் பொறுப்பாக இருந்தபோது,அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் என்னுடன் இருந்தார். நாம் சீனப் பிரதமர் லீ மற்றும் ஜனாதிபதி ஷீ ஆகியோருடன் கலந்துரையாடினோம். இது மிகவும் கடுமையானதொரு ஒப்பந்தம். என்றபோதும் இருதரப்புமே இதில் ஏதோவொரு பயனையடையக்கூடிய வகையிலான இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்துள்ளது’ என்றும் பிரதமர் கூறினார்.

அத்துடன் இதன்மூலம் கிடைக்கும் பயன்களை நேரில் பார்வையிடுவதற்காக சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றமைக்காக சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை குழு உள்ளிட்ட பலருக்கு பிரதமர் நன்றி கூறியுள்ளார்.

நாம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது இங்கிருந்த மிகப்பெரிய நீச்சல்தடாகமாக அம்பாந்தோட்டை துறைமுகம் விளங்கியது. எனினும் அடுத்த வருடம் முதல் இதற்குள் கப்பல் வந்து செல்வதைக் காணமுடியும். வெள்ளை யானைகளை நாம் பச்சையாக மாற்றி வருகின்றோம் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*