MANNAR-SATHOSA-ISUE-12

மன்னாரில் 30 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

மன்னார் நகர விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இதுவரை 30 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மனித எலும்புகள் அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,’விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நேற்றுக் காலை 7.30 மணியளவில் 20 ஆவது தடவையாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த அகழ்வுப் பணிகள் மிகவும் நுணுக்கமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அகழ்வுப் பணிகள் நிறைவடையும் வரை எவற்றையும் கூற முடியாது.

தொடர்ந்தும் அகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை மீட்டுள்ளோம்.

ஆனால் வேறு எந்த அபாயகரமான தடயப்பொருட்களும் கிடைக்கவில்லை. இது தொடர்பான மேலதிக விடயங்கள் எலும்புகள் மற்றும் தடயப் பொருட்களைப் பகுப்பாய்வு செய்த பின்னரே கூறமுடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*