central_bank

பிணைமுறி அறிக்கையை முழுதாக வெளியிட்டால் விசாரணைக்கு ஆபத்தாம்!

மத்திய வங்கி முறிகள் மோசடி விசாரணை அறிக்கையின் சில பக்கங்களை வெளியிட்டால் விசாரணைக்கு ஆபத்து என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள இணைப்புகளைப் பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆணைக்குழுவின் இணைப்புக்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் கூடிய கடிதம் கடந்த வௌ்ளிக்கிழமை ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஒரு சில இணைப்புகளைக் பகிரங்கப்படுத்தினால் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இடையூறு ஏற்படலாம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய வங்கி மற்றும் நாணயச்சபை சமர்ப்பித்துள்ள இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துவது என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*