police

கிளிநொச்சி இளைஞர்களை பிடிக்க மூன்று பொலிஸ் குழுக்களாம்!

கிளிநொச்சி – அம்பாள்புரத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சிறுத்தையைக் கொன்ற சம்பவத்துடன் 5 ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தையைத் தாக்கிக் கொன்ற சம்பவம் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் கானொளிகள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினூடாக பொலிஸ் நிலையத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஆதாரமாகக் கொண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உத்தரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு பொலிஸாரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைவாக சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*