Lasantha_Wickrematunge

லசந்த கொலை; பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கல்கிசை ​பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது நேற்று (செவ்வாய்க்கிழமை) கல்கிசை நீதவான் நீதிமன்றின் பிரதான நீதவான் மொஹ்மட் மிஹாயில் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவிடம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய வேண்டுமென குற்றவியல் விசாரணைத் திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதுமட்டுமன்றி முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவிடம் எதிர்வரும் 22 ஆம் திகதி குற்றவியல் விசாரணைத் திணைக்களம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி அன்று மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதவான், அதுவரையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*