karu

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில்!

மகாணசபைத் தேல்தல் குறித்து நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையவுள்ள நிலையில் அதனை மீண்டும் நடத்துவது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியினாலே பிரதமரினாலோ விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினாலே இதுவரை அறிவிக்க முடியாதுள்ளது என ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தம் டலஸ் அலகப்பெரும நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியதை அடுத்தே சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் இணக்கம் கிடைத்தவுடன் மத்திய வங்கியின் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி செயலாளர் சபாநாயகரிடம் அறிவித்துள்ள விடயத்தையும் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*