jasmin

ஜஸ்மின் சூக்காவிடம் காணாமல்போனோர் பட்டியல் கேட்கும் இலங்கை!

மனித உரிமை ஆர்வலர் ஜஸ்மின் சூக்காவின் தலைமையிலான அமைப்பு தன்னிடமுள்ள காணாமல்போனனோர் குறித்த பட்டியலை இலங்கையின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள பட்டியல் குறித்து எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை காணாமல்போன 351 பேரின் விபரங்கள் இந்த பட்டியலில் உள்ளதாக குறிப்பிட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ளவர்களிடம் காணாமல்போனவர்கள் குறித்த விபரங்கள் இருந்தால் அதனை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பான மேலதிக- வேறு அல்லது விபரமான தகவல்களையும், பட்டியலில் உள்ளவர்கள் எவ்வாறான சூழ்நிலையின் கீழ் காணாமல்போனார்கள் என்பது குறித்த தகவல்களையும் காணாமல்போனோர் அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*