viky

வடக்கு முதல்வருக்கு கட்டுப்பாடு போட்ட பிரிட்டன் தூதுவர்!

குட்­டை­யைக் குழப்­பா­தீர்­கள், அர­சு­டன் ஒத்­துப் போக­வேண்டும். அப்­போதுதான் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­யும் என்று பிரிட்­டன் தூது­வர் தெரி­வித்­தார்
என்று வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

பிரிட்­டன் தூது­வர் ஜேம்ஸ் டேரிஸ் நேற்று யாழ்ப்­பாண் வந்­தி­ருந்­தார். அவர் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ரைன அவ­ரது இல்­லத்­தில் நேற்று மாலை சந்­தித்­தார். சந்­திப்­பின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே வடக்கு முத­ல­மைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது-

பிரிட்­டன் தூது­வர் இங்கு வந்து எம்­மைச் சந்­திப்­பது வழமை. இந்த முறை சந்­திப்பு சற்று வித்­தி­ய­ச­மாக இருந்­தது. அர­சுக்கு எதி­ராக ஒன்­றும் சொல்ல வேண்­டாம், செய்ய வேண்­டாம், நீங்­கள் குட்­டை­யைக் குழப்­பு­கி­றீர்­கள், அப்­ப­டிச் செய்­வது பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தும் அல்­லவா? என்ற பாணி­யில் அவர் கதைத்­தி­ருந்­தார். நான் எமது நிலைப்­பாட்­டைக் கூறி­யி­ருந்­தேன்.

2016 ஆம் ஆண்டு இந்த அர­சைத் தீர்வு கிடைக்­கும் என்று நம்­பி­னோம். ஆனால் இன்­று­வரை தீர்வு கிடைக்­க­வில்லை. அரசு ஒன்­றைக் கூறு­கின்­றது இன்­னொன்­றைச் செய்­கின்­றது. 2018 இல் தீர்வு கிடைக்­கும் என்று கூறி­னார்­கள். ஆனால் ஒன்­றும் நடை­பெ­ற­வில்லை. அத­னால்­தான் நாம் சில­வற்­றைக் கூறி வரு­கின்­றோம்.
எங்­க­ளி­டம் இருந்து பறித்­த­வற்­றையே நாம் கேட்­கின்­றோம். அதற்கு ஏன் சிங்­கள மக்­கள் கோபப் படு­கின்­றார்­கள் என்று தெரி­ய­வில்லை.

ஜெனி­வாத் தீர்­மா­னம் தொடர்­பில் பேசி­யி­ருந்­தோம். அர­சும் அதற்­கான வேலை­க­ளைத் தாம­த­மா­கவே மேற்­கொண்டு வரு­கின்­றது என்­பதை அவ­ரும் ஒப்­புக்­கொண்­டார். இது தொடர்­பாக அர­சி­டம் கூறி வரு­கின்­றோம் என்று தெரி­வித்­தார்.

வெளிப்­ப­டைத் தன்மை, பொறுப்­புக்­கூ­றல் ஆகி­ய­வற்­றுக்­கான விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளும் போது மக்­க­ளின் ஆத­ர­வைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்று அவரே கூறு­கின்­றார். இது தொடர்­பான நீதி­மன்­றக் குழு இலங்­கை­யில் ஏற்­ப­டுத்த முடி­யுமா? என்று கேட்­டி­ருந்­தேன்.

ஆயி­னும் மூன்று சிங்­க­ளச் சட்­டத்­த­ர­ணி­கள் ஒரே விட­யத்­துக்­குத் தமி­ழர் சிங்­க­ள­வ­ருக்கு வேறு வேறு தீர்­வு­களை வழங்­கி­னர் என்று தங்­க­ளது நூலிலே கூறி­யி­ருக்­கின்­றார்­கள். இந்த நிலை­மை­யில்­தான் வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், சட்­டத் தர­ணி­களை உள்­ள­டக்­கிய விசா­ர­ணைக் குழு அமை­ய­வேண்­டும் என்­பது தொடர்­பில் பேசிக்­கொண்­டோம்.

கேள்வி: மாகா­ண­சபை தேர்­தல் தொடர்­பில் உங்­கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: மாகாண சபை ஆயுள் காலம் முடி­வ­டைய போகின்­றது. தேர்­தல் எப்­போது வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம். ஆயுள் நிறை­வ­டைந்­த­வு­டன் தேர்­தல் நடக்­கும் வரை அந்­தப் பொறுப்பை ஆளு­ந­ரி­டம் கொடுக்க வேண்­டாம் என்று தான் கூறி­னேன்.

கிழக்கு மாகா­ணத்­தில் சொல்­கின்­றார்­கள் ஆளு­ந­ரி­டம் கொடுத்த பின்­னர் அவர் தன்­னிச்­சை­யா­கப் பல வேலை­க­ளைச் செய்­கின்­றார், அத­னால் சில­ருக்கு பாத­க­மா­ன­தும் சில­ருக்கு நன்மை தரக் கூடிய வகை­யில் அது அமை­கின்­றது என்று. அத­னால் தான் ஆளு­ந­ரி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டாம்.-என்று கூறி­னேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*