mallakam-un

மல்லாகம் அசம்பாவிதம் தொடர்பில் ஐவர் கைது!

தெல்லிப்பளை, மல்லாகம் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து, பொலிஸார் நேற்று (17) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய பாக்கியராஜா சுதர்சன் என்பவர் உயிரிழந்தார்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் நிலமையை கட்டுப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

சகாய மாதா ஆலயத்தின் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலயத்தின் முன்பாக நேற்று (17) மாலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று (18) காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மனித உரிமைகள் ஆணைக்குழு, மக்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்போது தமக்கு நீதி வேண்டும் என மக்கள் கூறியுள்ளதுடன், தமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களையு ம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*