maithripala-sirisena

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுகிறாரா மைத்திரி!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது நிறைவு தினத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வெளிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லுபடியற்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் குறித்த தமது நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*