viky

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நிரந்தரக் குழு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி முன்னெடுப்பதற்கு நிரந்தரமான குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம்.

அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம். இனிவருங்காலங்களில் சில வேளை வட.மாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரலாம்.

அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்க வேண்டிவரினும் கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்துபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம்.

மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம். இக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேன். என்று குறிபிட்டுள்ள வடக்கு முதல்வர், குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*