kaanaamal aa

காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பு திருமலையில்!

காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

யுத்த காலங்களில் வடகிழக்கு பகுதிகளில் காணமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர‍ை தேடும் காணாமல்போனோர் அலுவலகமானது தனது ஆரம்ப சந்திப்புக்களை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது. இச் சந்திப்புகள் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தது.

இந் நிலையில் தனது அடுத்த சந்திப்பினை எதிர்வரும் 13 ஆம் திகதி திருகோணமலையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சேவை அமைப்புக்கள், காணாமல் போனோர் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்து காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஏழுபேரும் சந்தித்து அலுவலகத்தின் திட்டம் மற்றும் மூலோபாயங்கள் குறித்தும் விளக்கமளிக்கவுமுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*