MANNAR-SATHOSA-ISUE-12

மன்னாரில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு தொடர்கிறது!

மன்னார் நகர நுழைவாயிலில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பிலான அகழ்வுப் பணிகள் நேற்று (புதன்கிழமை) 3 ஆவது நாளாக இடம்பெற்றுவருகின்றன.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மூன்றாவது நாளாகவும் குறித்த அகழ்வு பணிகள் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத்திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அகழ்வினை பார்வையிட்டனர்.

தொடரும் இந்த அகழ்வுப் பணிகளில் இரு இடங்களிலும் மனித எலும்புத்துண்டுகள், பற்கள் என்பன தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*