GL-peiris

பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் என்கிறார் பீரிஸ்!

இனிவரும் காலங்களில் நடத்தப்படும் அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுமென, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலென அனைத்துத் தேர்தல்களிலும், தமது கட்சிய போட்டியிடுமெனத் தெரிவித்த அவர், அதற்காக இணைய விரும்பும் அனைத்துத் தரப்பினருடனும், இணக்கப்பாட்டுடன் செயற்பட, தமது கட்சி தயாராக உள்ளதென்றும், குறிப்பிட்டார்.

அஸ்கிரிய மாசபையின் மாத்தளை மாவட்ட உப சங்கநாயக்கத் தேரரும் ரங்கிரி தம்புளை ரஜமகா விகாரையில் விகாராதிபதியுமான அம்பகஸ்வெவே ராஹுல தேரரை, சந்தித்துக் கலந்துரையாடிய அவர், பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பிலும், சங்கநாயக்கரைத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அரச அதிகாரிகளைப் பழிதீர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அரச சொத்துகள் சூரையாடப்படுவதாகவும் கூறினார். இதற்குப் பதிலளித்த தேரர், பாரியதொரு பிரச்சினைக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாகவும் புத்த சாசனத்தை அது, பாரியளவில் தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*