keheliya1-415x260

நல்லாட்சியிலேயே அதிக கடன் பெறப்படடுள்ளது – கெஹலிய குற்றச்சாட்டு!

முன்னைய ஆட்சிக் காலத்தைவிட தற்போதைய நல்லாட்சியிலேயே அதிக கடன் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த கால அரசாங்கத்தினை விட அதிகளவான கடன்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுள்ளதுடன், மக்களை மேலும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பெற்ற வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்காகவே இந்த அரசாங்கம் அதிகளவான கடனைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றது.

கடந்த அரசாங்கம் வெளிநாட்டு கடன்களை பெற்றிருந்தாலும் பல துறைகளிலும் அபிவிருத்தி மற்றும் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்தது. எனினும் கடந்த அரசாங்கத்தினை விடத் தேசிய அரசாங்கமே 2015 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியிலேயே அதிக வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது.

தமது குறைகளை மறைப்பதற்காகவே இந்த அரசாங்கம் தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றது. முறையான பொருளாதாரக் கொள்கைகளை இந்த அரசாங்கம் கொண்டிருக்காததால் மக்கள் மேலும் இன்னல்களை எதிர்நோக்கவுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*