Murasu

வன்னியில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் படையினரால் மீட்பு!

முரசுமோட்டையில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பது துப்பாக்கி ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. முருகானந்தா கல்லூரிக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், கிராமசேவகர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது.

பின்னர், கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் நேற்றுப் பிற்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56 துப்பாக்கியின் ரவைகள் அடங்கிய ரவைப் பெட்டிகள் நாற்பதினை மீட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*