house

எட்டு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழும் புன்னைநீராவி மக்கள்!

கிளிநொச்சி புன்னைநீராவிக் கிராமத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவிக் கிராமத்தில் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு 11 குடும்பங்களுக்கு மாத்திரமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய குடும்பங்கள் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்தும் தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருவதாக குறிப்பிடுகின்றனர்.

தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத்தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்த போதும் காணிகளுக்கான ஆவணங்கள் இன்மையால் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. தற்போது அந்த ஆவணங்கள் உள்ளபோதும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டில் 76 பேருக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்குவதாகத் தெரிவித்து அதற்கான ஆணங்கள் தயார் செய்யப்பட்டதுடன் வங்கிக்கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அந்தத் திட்டங்களை இதுவரை செயற்படுத்தவில்லையென அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனால் தமக்கான நிரந்த வீடுகளை துரிதமாக அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*