Mahinda-Gota

மஹிந்தவை சந்திக்கிறது பதினாறுபேர் அணி!

தன்னைச் சந்திக்க வருகை தரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் தனக்குப் புதியவர்கள் அல்லவெனவும், தனது ஆட்சியில் இருந்த அமைச்சர்களே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னைச் சந்திக்க வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றியளிக்கும் என நான் நம்புகின்றேன்.

இந்த 16 பேரும் எனக்குப் புதியவர்களோ அல்லது விருந்தினர்களோ அல்ல. எனது ஆட்சியில் இருந்த அமைச்சர்களே இவர்கள். எனவே நாட்டினது எதிர்கால நலன் கருதிச் செயற்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் இன்று கலந்துரையாடப்படும்.

நாட்டின் அரசியல் சார்ந்த விடயங்கள் குறித்து அவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து கொண்ட பின்னரே ஏனைய விடயங்களைத் தீர்மானிக்க முடியும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்தக் கட்சியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் கீழ் ஒன்றுபட்டால் மாத்திரமே அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஒன்றிணைய முடியும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*