el-750x430

விடுதலைப்புலிகளின் விவசாயப் பண்ணையில் யானையைக் கொன்ற இராணுவம்!

முல்­லைத்­தீவு விசு­வ­மடு தேரா­வி­லில் அமைந்­துள்ள படை­யி­ன­ரின் விவ­சாய பண்­ணை­யின் மின்­சார இணைப்பு கம்­பி­யில் சிக்­கிக் காட்டு யானை ஒன்று உயி­ரி­ழந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் கப்­டன் தர அதி­காரி ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை நடந்­துள்­ளது.

தேரா­வில் பகு­தி­யில் உள்ள நூறு ஏக்­க­ருக்­கும் அதி­க­மான முன்­னர் விடு­த­லைப்­பு­லி­க­ளின் விவ­சாய பண்­ணை­யாக இருந்த பகு­தி­யினை 68 ஆவது படை­பி­ரி­வின் 3ஆவது படை­யணி பெரும் விவ­சா­யச் செய்கை யில் ஈடு­ப­டுட்­டுள்­ள­ள­னர். இவர்­க­ளின் விவ­சா­ய­ செய்­கைக்­கா­கவே அண்­மை­யில் உடை­யார் கட்­டுக்­கு­ளத்­தில் இருந்து படை­யி­னர் நீரினை இறைந்­த­னர். பின்­னர் அது மக்­கள் போராட்­டம் மூலம் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

அந்த விவ­சாயப் பண்­ணை­யின் காட்­டுப்­பக்­கத்­தில் உள்ள எல்லைப் பகு­தி­யில் இருந்து பாது­காப்­பற்ற மின்­சார இணைப்பு ஒன்­றின் மூலம் உடை­யார் கட்டு குளத்­துக்கு அரு­கில் உள்ள பிள்­ளை­யார் ஆல­யம் ஒன்­றுக்கு மின்­கு­மிழ் ஒன்­றினை ஒளி­ர­வைத்­துள்­ளார்­கள். இந்த பாது­காப்­பற்ற மின்­சார இணைப்­புக்கு யானை வேலி­யைப் போல் மின்­சா­ரம் பாய்ச்­சப்­பட்­டுள்­ளது.

இதில் அதி­காலை சிக்­குண்ட தனி­யன் கொம்­பன் யானை ஒன்று உயி­ரி­ழந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் பிர­தேச மக்­கள் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ள­னர். அதற்­கி­டை­யில் படை­யி­னர் மின்­சார இணைப்பை அகற்­றி­விட்­ட­னர் என்று மக்­கள் கூறு­கின்­ற­னர்.
யானை­யின் உயி­ரி­ழப்பு தொடர்­பில் வட­பி­ராந்­திய வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தின் கால்­நடை மருத்­துவ உத்­தி­யோ­கத்­தரை சம்­பவ இடத்­துக்­குச் சென்­றுள்­ள­னர். புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார், கிரா­ம­சே­வ­கர்,பிர­தேச சபை­உ­றுப்­பி­னர் மற்­றும் படை அதி­கா­ரி­க­ளும் குறித்த பகு­திக்கு சென்று யானை உயி­ரி­ழந்­துள்­ளமை தொடர்­பில் ஆராய்ந்­த­னர்.
உடற்­கூற்­றுச் சோதனை மேற்­கொண்ட வட­பி­ராந்­திய வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தின் கால்­நடை மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர் பா.கிரி­த­ரன் யானை மின்­சா­ரத்­தில் தாக்­குண்டே உயி­ரி­ழந்­துள்­ளது என்று தெரி­வி­த­துள்­ளார்.
இந்த யானை 35 அக­வை­யு­டை­யது என்­றும் இது இன்­னும் நீண்ட காலம் வாழும் என்­றும் இவ்­வா­றான இன யானை­கள் வடக்­கில் மூன்று யானை­களே இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நேற்று மாலை அந்த இரா­ணுவ முகா­மைச் சேர்ந்த கப்­டன் தர இரா­ணுவ அதி­காரி ஒரு­வர் வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இவர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இது தொடர்­பான வழக்கு எதிர்­வ­ரும் 8 ஆம் திகதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*