sivaji

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கை தொடர்பில் சிவாஜிலிங்கம் விமர்சனம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நடந்து கொண்ட விதம் தவறானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கறுப்பு உடையை அணிந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டது மட்டுமே மாணவர்களின் சாதனை எனவும் அவர் சாடியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபை மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வாதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாது பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன.

இந்நிலையில் நினைவேந்தல் ஒழுங்கமைப்பில் தவறுகள் காணப்பட்டதாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இறுதிக்கட்ட யுத்ததின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்ட பொருட்களை வடமாகாண சபையிடம் கையளிக்குமாறு தாம் கோரியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*