20180510_132209

முள்ளிவாய்க்கால்; மூத்த போராளிகள் விடுத்த வேண்டுகோள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பிளவு படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த தீய சக்திகள் சில முயன்றவருகின்ற சூழலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையின் முன்னிறுத்தலில் இவ்வாண்டும் மேற்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் பகிரங்க கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த மற்றும் மத்திய குழுவிலிருந்த போராளிகளான பசீர் காக்கா(முத்துக்குமார் மனோகர்), திருகோணமலையினை சேர்ந்த ரூபன்(ஆத்மலிங்கம் ரவீந்திரா) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பினை சேர்ந்த் மூத்த மற்றும் மத்திய குழுவிலிருந்த போராளியான யோகன் பாதர்( பாலிப்போடி சின்னத்துரை) தனது சம்மத்தினை எழுத்து மூலமாக அறிவித்திருந்தார்.

அவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து தியாகங்களிற்கு மதிப்பளியுங்கள் என கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.

எமது மக்களிற்கு இழைக்கப்பட் அநீதியை உலகிற்கு எடுத்துரைத்ததில் வடமாகாணசபையின் இன அழிப்பு தீர்மானம் காத்திரமானது.

இவ்வகையில் இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாதென கருதுகின்றோம்.

அத்தீர்மானத்தை கொண்டுவந்த வடக்கு முதல்வரின் பங்களிப்பை வேறெவரினதும் தேவைகளிற்கோ நோக்கங்களிற்கோ நிராகரிப்பது ஏற்புடையதல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓற்றுமையாய் வாரீர் என்ற கோசங்களிற்கு மத்தியில் வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதாக கருதுகின்றோம்.தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் குழப்பங்கள் ஏற்படுமென எச்சரிப்பது வேதனையினை தருவதாக கண்ணீரூடே பசீர் காக்கா(முத்துக்குமார் மனோகர்) தெரிவித்தார்.

எமது மக்கள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டிலிருப்பதாக தெரிவித்த அவர் மக்கள் மாவீரர் தினத்தில் தன்னெழுச்சியாக எழுந்து அஞ்சலித்தது போன்று இம்முறையும் திரள்வர். அம்மக்களை முன்னிறுத்தி தவறான பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*