jaffna

தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய பத்துப்பேர் கைது!

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
நேற்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். அவர்களில் வாடகைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.

திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*