mavai-965s

மே 18 இல் ஒன்றுகூட தமிழரசுக்கட்சியும் அழைப்பு!

முள்­ளி­வாய்க்கா­லில் நாமும் எம் இனத்­தின் விடு­த­லைக்­காய் உயிர் கொடுத்­த­வர்­க ளுக்கு ஒரு நினை­வி­டத்­தைக் கட்­ட­மைக்க வேண்­டும். தஞ்­சை­யில் அமைந்­துள்ள நினை வி­டம் போன்­றா­வது அனை­வ­ருக்­கும் உரித்­தாய் அனை­வ­ரும் நினைவு கூரு­வ­தற்­காய் ஓரி­டத்­தில் ஒன்று கூடி அஞ்­சலி செய்­ய­வும், கண்­ணீர் விட்டு ஆறு­தல் பெற­வும் இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண் டும். அந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் புனி­தக் கட­மையை நிறை­வு­செய்­ய­வும் அனை­வ­ரும் மே 18இல் ஒன்று கூடு­வோம் என்று அழைக்­கின்றோம். இவ்­வாறு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை. சோ.சேனா­தி­ராசா கோரி­யுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

இலங்­கை­யில் தமிழ்த் தேசத்­தின், தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக பல தசாப்­தங்­க­ளாக நடை­பெற்ற போராட்­டங்­கள், நீதி­யா­ன­தும், நியா­ய­மா­ன­தும், வர­லாற்று நிகழ்­வு­க­ளில் பதிந்­த­வை­க­ளா­க­வும் இருந்து வரு­கின்­றன.

இதற்­கும் மேலாக இலங்­கைப் பிரச்­சினை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மைப் பேரவை அறிக்­கை­கள், தீர்­மா­னங்­கள் இலங்­கை­யில் தலை­யீடு செய்து இலங்­கைப் பிரச்­சி­னை­க­ளுக்­குக் குறிப்­பாக தமி­ழி­னப் பிரச்­ச­னைக்­குத் தீர்வை எட்­டு­வ­தற்­கும், உலக சந்­தர்ப்­பத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. அவ்­வ­ள­வுக்கு மேலாக “மே” 18 நினைவு நிகழ்­வு­க­ளும் வர­லாற்று முக்­கி­யம் வாய்ந்­த­தா­கி­யி­ருக்­கின்­றது.

போரால் அழிந்­து­போன குறிப்­பி­டும்­ப­டி­யான இடங்­க­ளை­யும், இடி­பா­டு­க­ளை­யும் கூடப் பல நாடு­க­ளில் அஞ்­ச­லிக்­கும் இட­மா­கப் பாது­காத்து வரு­கின்­ற­னர். அந்­தந்த நாடு­க­ளில் குறித்த ஒரு நாளில் ஒன்­று­கூடி துயர ஒலி எழுப்­பிப் பின் பிரார்த்­தனை செய்து துன்ப துயர நிகழ்வை இத­யத்­தில் வைத்து வணங்­கி­யும், கண்­ணீர் விட்­டும் அஞ்­சலி செலுத்­து­கின்­ற­னர். பக்­கத்­தில் யார் நிற்­கி­றார்­கள் என்று கூடப் பார்ப்­ப­தில்லை.

அந்த நாடு­க­ளில் அந்த நினை­வி­டங்­க­ளில், நினை­வுத் தூபி­க­ளில், கட்­ட­மைப்­புக்­க­ளில் பெயர், காலம், இடம் குறித்­தும் வார்த்­தை­க­ளில், எண்­ணம் முகிழ்ந்­த­வை­க­ளை­யும், உண்மை நிகழ்­வு­க­ளை­யும் வர­லாற்று வரி­க­ளை­யும் பதிவு செய்­துள்­ள­னர். நினை­வி­டத்­தில் கட்­ட­மைப்­பில் வரி வடி­வங்­க­ளில், பிர­தி­மை­க­ளோடு இந்­தத் தினத்­தில் துயர் நிகழ்­வு­க­ளைப் பதிவு செய்­துள்­ள­னர்.

சிறு­வர்­கள், மாண­வர்­கள், முதி­ய­வர்­கள், வலி சுமந்­த­வர்­கள் போரில் ஈடு­பட்டு அங்­கங்­கள் இழந்­த­வர்­கள்­கூட அத்­த­கைய இடங்­க­ளுக்­குச் சென்று பிரார்த்­திப்­ப­தைப் பார்த்­தி­ருக்­கி­றோம். இலங்­கை­யி­லும் தம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அரசு நாடா­ளு­மன்ற முன்­ற­லில் நினை­வி­டம் அமைத்து நினைவு பேணி அஞ்­சலி செலுத்­து­கி­றது.

இந்­தி­யா­வில் தமி­ழ­கத்­தில் தஞ்­சைத் தர­ணி­யில் தமி­ழீ­ழப் போர் நினை­வி­டந் திறந்­த­போ­தும், பெரும் அஞ்­சலி நிகழ்ச்­சி­க­ளி­லும் பழ.நெடு­மா­ற­னோடு அவர் அழைப்­பில் கலந்து கொண்­டி­ருக்­கி­றோம்.

உல­கத் தமி­ழர்­க­ளுக்கு அது ஓர் நினை­வி­டம். போருக்கு முன்­ன­ரும், போர்க் காலத்­தி­லும், பின்­ன­ரும் இரா­ணு­வம் மற்­றும் உள­வுத்­து­றை­யி­னர் தடை­க­ளும் கண்­கா­ணிப்­புக்­க­ளும், இரா­ணு­வம் குவிக்­கப்­பட்ட நிலை­க­ளி­லும், அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லும்­கூட கண்­ணீர் அஞ்­ச­லி­க­ளை­யும், சுடர் ஏற்­றும் நிகழ்ச்­சி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றோம், கலந்­து­கொண்­டி­ருக்­கி­றோம்.

முள்­ளி­வாய்க்­கா­லில் 2009 முதல் எந்த இடத்­தில் பொது இட­மாக, நினை­வி­ட­மாக அஞ்­ச­லி­யைச் செலுத்­த­லாம் என்­பது பற்றி அந்­தப் பிர­தே­சத்­துக்­குச் சென்று ஆராய்ந்­தி­ருக்­கி­றோம். ஓர் இடத்­தைப் பொது இட­மா­க­வும், ஒரு நாளைப் பொது­நா­ளா­க­வும் தீர்­மா­னித்து “மே” 18ஆம் நாள் என்று அறி­வித்­தி­ருக்­கி­றோம். யாருக்­கும் தனியே அந்த இடங்­க­ளில் சொந்­தங் கொள்ள இட­மில்லை. அந்த இடத்­தின் புனி­தம் வித்­து­டல்­க­ளின் விளை­நி­ல­மாய் அந்­தத் தாகத்­தின் எழு­நி­ல­மாய் எழுந்து நின்று ஆத்ம பலத்தை உரு­வாக்­கு­கி­றது.

இன்­னும் ஆன்­மீக நம்­பிக்­கை­யுள்­ளோர் கடல், ஆற்று நீர் நிலை­க­ளுக்­குச் சென்று ஈமக்­க­டன் இயற்­று­ப­வர்­கள், தேவா­ல­யங்­க­ளில், கோவில்­க­ளில் பிரார்த்­தனை செய்­வோர் அனை­வ­ரும் அந்­தக் கட­மை­களை நிறை­வேற்­ற­வும் விதி கொண்­டுள்­ள­னர்.

வலி தாங்கி நிற்­போ­ரும், மனித நேய­மிக்­கோ­ரும், இலட்­சிய தாகங்­கொண்­டோ­ரும், கல்­வி­யா­ளர், மாண­வர், எதிர்­கால இளைய சமு­தா­ய­மும் ஈடு­பாடு கொள்­வது, சங்­க­ம­மா­வது காலத்­தின் தேவை­யா­கும். அவர்­கள் முள்­ளி­வாய்க்­கால் நினை­வி­டத்­தில் ஒன்று கூட முத­லில் அழைப்பு விடுத்­தமை மதிக்­கப்­பட வேண்­டும்.

அந்த வேளை­க­ளி­லா­வது எந்­தக் கொள்கை, கோட்­பா­டு­க­ளுக்கு, இலட்­சி­யத்­துக்­காய் உயிர் கொடுத்­தார்­களோ வலி சுமந்­தோமோ அந்த விடு­த­லைக்­காய் அர்ப்­ப­ணிப்­போம் என உறுதி எடுக்க வேண்­டு­மெ­ன­வும் அழைப்பு விடுக்­கின்­றோம் – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*