kajantha

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் குறித்து கயந்த கருணாதிலக்க!

அமைச்சுகளை மட்டுப்படுத்தி அதிகளவான சேவைகளை வழங்குவதே புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவையில் விலகியிருந்த பதினாறு பேரில் ஆறு பேர் அமைச்சரவை அந்தஸ்து பெற்றவர்கள். இவர்களுக்கு பதிலாக புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் உள்ள அமைச்சு பதவிகளை பகிர்ந்தளித்து வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளை மட்டுப்படுத்தி அதிகளவான சேவைகளை வழங்குவது குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் சிந்தித்தே புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதற்கான பலாபலன்களை எதிர்காலத்தில் அனுபவிக்கலாம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*