GL-1

அமைச்சரவை மாற்றம் பிரச்சினைகளுக்கு தீர்வில்லை என்கிறார் பீரிஸ்!

அமைச்சரவை மாற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்லவெனவும், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது இதில் கலந்து கொண்டு இன்றைய அமைச்சரவை மாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினை ஏதுவும் தீரப்போவதுமில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இவ்வாறன விடயங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*