mulliwaik

முள்ளிவாய்க்காலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிரமதானம்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவிடத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்களும் இணைந்து சிரமதானமொன்றை  முன்னெடுத்துள்ளார்கள்.

முள்ளியவளை மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் இணைந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை பெற்றுக்கொடுத்தனர்.

மேலும்,

முல்லைத்தீவு நகரில் ஒரு வருடமாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் ஒரு வருடத்திற்கும் மேலாக சொந்த நிலத்தை விடுவிக்ககோரி போராட்டம் நடத்திவரும் கேப்பாபிலவு மக்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தொடர்ந்து, கிளிநொச்சி நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் இம்மாணவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*