food

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு!

அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு அரச தலைவரது செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற அமர்வில் புதிய அமைச்சர்களில் விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

அதில் எதிர்பார்த்தளவு அமைச்சரவை மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஏற்கனவே அமைச்சுப் பதவிகளில் இருந்தவர்களுக்கு அதே அமைச்சுப் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஸ்மன் கிரியெல்ல, விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி , திறன் அவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகம, விவசாய அமைச்சராக மகிந்த அமரவீர, உள்நாட்டலுவல்கள மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி. நாவின்ன, நீர்ப்பாசன மற்றும் நீரியல்வள முகாமைத்துவம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க, சமூக வலுவூட்டல் அமைச்சராக பீ. ஹரிசன், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரல, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிம், பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மந்துமபண்டார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் முஸ்தபா, மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா, மீள் குடியேற்றம் மற்றும்,வட மாகாண அபிவிருத்தி,இந்து விவகார அமைச்சராக டீ.எம்.சுவாமிநாதன், அரச கருமமொழிகள், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசன், திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க, உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக விஜேதாச ராஜபக்‌ச, நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா, சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே , தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*