mahinda

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் மஹிந்த விமர்சனம்!

அரசாங்கம் எரிவாயு விலையை அதிகரித்தமையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டு மக்கள் வருமானத்தை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த எரிவாயு விலையினால் வியாபாரிகளும் உணவு பொருட்களின் விலையை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதிலுமுள்ள பெரும்பாலான மக்கள் எரிவாயு பாவனையை மேற்கொள்வர்களாகவே உள்ளனர்.

ஆனால், இதனைக் கருத்திற் கொள்ளாமல் அரசாங்கம் உலக சந்தையினை காரணம் காட்டி எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அரசாங்கம் மக்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் தனக்கு விருப்பமான முறையில் செயற்படுவதால் நாளடைவில் தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*