basil

தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்து ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்பப் போகிறாராம் பஷில்!

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு ஒற்றுமையான சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே தமது பிரதான நோக்கமாகுமென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெஹிவளை, மொறட்டுவ பிரதேசங்களில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வுகளை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”எமது கட்சியின் கதவு அனைவருக்காகவும் திறந்தே காணப்படுகிறது. எனினும், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் எமது அணியில் இணைவது தொடர்பில் அவர்களே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில், தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொண்டு, அனைவரும் ஒற்றுமையாக வாழும் சமூகம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*