Ravi-Karunanayake_4_6

ஐ.தே.வின் உப தலைவராக ரவி!

ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளார்.

தான் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், அவரின் நியமனத்திற்கு எதிராக போராடுவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*