SLFP_777e

சுதந்திரக் கட்சியியை மறுசீரமைக்க மத்திய செயற்குழு தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மே 8 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை மாற்றுமாறு அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் ஒரே குரலில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ.தே.கட்சியும் தனது கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் மஹிந்த குழுவுடன் இணைவார்களா? அல்லது அவர்களது அடுத்த நகர்வுகள் என்ன என்பதை வைத்தே கட்சியின் பொறுப்புக்களில் புதிய மாற்றங்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*