vijaya

இலங்கையை சீனாவே வழிநடத்துவதாக குற்றச்சாட்டு!

இலங்கையை சீனாவே வழிநடத்துகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது அதிகாரத்தை எல்லை மீறி பிரயோகிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையை தமது கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றதென மேலும் தெரிவித்துள்ளார்.

மல்வத்தை  அஸ்கிரிய மநாநாயக்கர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் எந்த கட்சிக்கும் நிலையான கொள்கையில்லை. தனியாட்சி மேற்கொள்வதா என்று ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை.

புதிய அமைச்சரவையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்று ஜனாதிபதி இன்னும் முடிவு செய்யவில்லை” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*