Mano-Ganesan-01

புதிய அரசியலமைப்பு இல்லையென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை – மனோ!

புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை என அமைச்சரும், ஜனநாயக மக்களின் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்களின் முன்னணியின் ஊடகச் செயலகத்தினால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”எம் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை தீர்வு ஆகும். அதற்காகத்தான் தேசிய இனப்பிரச்சினைக்கு, பிரிபடாத நாட்டுக்குள்ளே தீர்வு காண புதிய அரசியலமைப்பு பணியை ஆரம்பித்தோம். அதில் நான், சம்பந்தன் உட்பட அனைத்து கட்சித்தலைவர்களும் இருக்கிறோம்.

ஆனால், தற்போதைய அரசியல் சந்தடிகளில் காணாமல் போயுள்ள புதிய அரசியலமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதுபற்றி கடந்த வாரம் சம்பந்தனை ஒரு நிகழ்வில் சந்தித்து கூறியிருந்தேன். எனது கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான வழித்தேடல் என்ற அடிப்படையில்தான் அவர் எதிர்கட்சி தலைவர் பதவி அமர்த்தப்பட்டார். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் புது அரசியலமைப்பு பணிகள் ஆரம்பமாக வேண்டும். உண்மையில் அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சி தலைவர் பதவியினால் பயன் விளையப்போவதில்லை.

புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வில்லையென்றால், எதிர்க்கட்சி தலைவர் பதவி சும்மா பக்க வாத்தியம்தான். சில அதிதீவிரவாத தமிழ் தரப்புகள் மத்தியில் இருந்து கடும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் சம்பந்தனின் நியாயமான கோரிக்கைகள்கூட அரசாங்கம் கணக்கில் எடுக்காவிட்டால், இந்நாடு மீண்டும் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*