anai

பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற அன்னைபூபதியின் நினைவு வணக்க நிகழ்வுகள்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தமது குடும்பம் தவிர்ந்தவர்கள் தமது அனுமதியின்றி தமது அன்னையின் நிகழ்வினை நடாத்தகூடாது என மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அன்னை பூபதியின் குடும்பத்தினரால் சமாதிக்கு மலரஞ்சலி மற்றும் நினைவுத்தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது குடும்பத்தினரின் அனுமதியைப்பெற்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன, பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயக போராளிகள் அமைப்பின் உறுப்பினர்களும் இதன்போது அஞ்சலி செலுத்தினர்.

குறித்த பகுதியில் அஞ்சலி கூட்டம் நடாத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் குடும்பத்தினர் அதற்கான அனுமதியை மறுத்ததன் காரணமாக அஞ்சலிக்கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு வட கிழக்கில் இருந்து பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த பெருமளவானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*