tilvin

யாழில் ஐம்பதாயிரம் பேருடன் மேதினம் – ஜே.வி.பி அறிவிப்பு!

எதிர்வரும் மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மே தினம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக கொண்டாடப்படும் ஒன்றாகும் எனவே தற்போதைய இலங்கைக்கும் இது அவசியமானதொன்றாகும் என டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கொழும்பில் வெசாக் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதால் மே தினத்தை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். எனினும் மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்க எவருக்கும் உரிமையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், கொழும்பில் இம்முறை மே தினத்தை முன்னெடுக்கலாம் எனினும் 1000 பேர்கள் வரையில் ஒன்று கூட்டுவது என்றால் அது இலகு எனினும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை இம்முறை ஒன்று கூட்டவுள்ளோம்.

இதனால் வெசாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்படக் கூடும் என்பதன் காரணமாக மே தினத்தை யாழில் முன்னெடுக்கவுள்ளோம் அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் தர வேண்டும் என டில்வின் சில்வா கோரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*