Maithri-Ranil

தேசிய அரசாங்கத்திலிருந்து பதினாறு உறுப்பினர்கள் விலக தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்களும் மற்றும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*