Daglos

வடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளசும் போட்டியாம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி டக்ளஸ் தேவானந்தா ஆலோசித்து வருகின்றார் என்று கூறப்படுகிறது.

“மாகாண சபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே, எனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*