ranil

தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை; ரணில் – மைத்திரி தீர்மானம்!

சமகால அரசியலில் எத்தகைய குழப்பங்கள் தோன்றினாலும் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் மேலும், எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும் மைத்திரி, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று அமைச்சரவை கூட்டத்தினை சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர். இதன் காரணமாக தேசிய அரசாங்கத்தில் பிளவுகள் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தில் பிளவுகள் ஏற்படாது என ரணிலிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*