file
file

காணாமல் போனோரின் உறவுகளை சந்திக்க அலுவலத்தினர் தீர்மானம்!

காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்க காணாமல் போனோர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என, காணாமல் போனோர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 28 தற்காலிக பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பிலும், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான ஆர்வலர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு, குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*