Mahinda-Gota

ரணிலுக்கு எதிரான உறுப்பினர்களுக்கு மஹிந்த அழைப்பு!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தம்மோடு இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் என 16 பேர் ஆதரவாக வாக்களித்தும், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் செயற்பட்டனர்.

இவர்கள் தொடர்பில் அரசுக்குள்ளும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மகிந்த இந்த அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*