al-tna1

ரணில் விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு முடிவெட்டவில்லையாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடியபோதும் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எதுவித முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை மேற்படிக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த கலந்துரையாடலின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக நாளை காலை மீண்டும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூடவுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இன்றிரவு அல்லது நாளை காலை கட்சிக்கிடையே கலந்துரையாடி தீர்மானத்தை வெளியிடுவோம்’ என இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*