unp

ரணிலுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஐ.தே.க!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 120 வாக்குகள் வரை நிச்சயமாக கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். மஹிந்தவின் கட்சியிலிருந்தும் இதற்கான ஆதரவு கிடைக்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நளின் பண்டார தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு, தாமரை மொட்டிலிருந்து (மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன) 2 அல்லது மூன்று வாக்குகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எப்படியும் இந்த பிரேரணைக்கு எதிராக நாம் 120 வாக்குகள்வரை எடுத்துவிடுவோம்.

இந்தப் பிரேரணையை ஏன் கொண்டுவந்தீர்கள் என மஹிந்த தரப்பின் சிலர், அவர்களுக்குள்ளேயே அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்தப் பிரேரணை வென்றாலும் தோற்றாலும் தமக்கு வெற்றியே என பொது எதிரணியின் உறுப்பினரான உதய கம்மன்பில கூறுகிறார். தங்களின் தோல்வியை இப்போதே அறிந்துகொண்டுதான் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர். பிரேரணை தோற்றவுடன் இவ்வாறான கருத்துக்களையே வெளியிடப் போகின்றனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*