dead+body+outline

அம்பன் வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குளிலிருந்து மகள் சடலமாகவும், தாயார் படுகாயங்களுடனும் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.

குறித்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்த நிலையில் கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லதம்பி தேவகி (வயது- 58) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது தாயார் நல்லதம்பி செல்லம்மா (வயது 76) படுகாயமடைந்த நிலையி்ல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*