01

ஆனந்த சுதாகரின் வழக்கு தொடர்பான அறிக்கை கோரியது ஜனாதிபதி செயலகம்!

ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 26 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் விடுத்த உத்தரவில் குறித்த அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை ஆகியவற்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஆனந்த சுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தந்தையை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் ஜனாதிபதி செயலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*