Capture-239

வடக்கில் ஐம்பது தொழிற்சாலைகள் உருவாக்க நடவடிக்கை!

வடக்கு மாகா­ணத்­தில் ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா நிதியில், உற்­பத்­தி­யா­ளர் கூட்­டு­ற­வுத் திட்­டத்­தின் ஊடாக 50 தொழிற்­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்டு வேலை வாய்ப்­புக்­கள் வழங்கப்­ப­ட­வுள்­ளன. நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, இலங்கை மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோர் இந்த விட­யத்தை யாழ்ப்­பா­ணத்­தில் தெரி­வித்­த­னர்.

நிதி அமைச்­சர் மற்­றும் இலங்கை வங்கி ஆளு­நர் ஆகி­யோர் நேற்று யாழ்ப்­பா­ணம் வருகை தந்­த­னர். யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில், வர்த்­தக சமூ­கத்­தி­னர், கூட்­டு­ற­வுத் துறை­யி­னர், வங்­கித் துறை­யி­னர் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

போரி­னால் பாதிக்­கப்­பட்ட வடக்கு வர்த்­தக சமூ­கத்­துக்கு இலகு கடன் அல்­லது மானி­யங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை அவர்­க­ளி­டம் முன்­வைக்­கப்­பட்­டது. வடக்­கில் இருந்து 300 தொழில் முயற்­சி­யா­ளர்­கள், ஒவ்­வொ­ரு­வ­ரும் 3 தொடக்­கம் 5 லட்­சம் ரூபா செலவு செய்து திட்­டங்­க­ளைச் சமர்­பித்­த­போ­தும் யு.எஸ்.எயிட் ஊடான உத­வித் திட்­டம் வடக்­கைச் சேர்ந்த எவ­ருக்­கும் கிடைக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

அந்­தத் திட்­டத்­தைப் பெற்­றுக் கொண்ட தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இங்கு வந்து தொழில்­து­றை­யினை ஆரம்­பித்­துள்­ள­னர் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

நிதி நிறு­வ­னங்­கள், மக்­க­ளுக்கு கடன் வழங்கி அவர்­களை கட­னா­ளி­க­ளாக்­கி­யுள்­ள­னர். அவர்­கள் வரை­ய­றை­யில்­லா­மல் செயற்­பட்டு இங்கு பல­ரைக் கட­னா­ளி­யு­மாக்­கி­யுள்­ள­னர் என்­றும் அமைச்­ச­ருக்­கும் ஆளு­ந­ருக்­கும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. பலர் கடன்­களை திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் உயிரை மாய்த்­துள்­ள­னர் என்­கிற விவ­ர­மும் தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்­கில் தொழில் துறை­யி­னர், சுய­தொ­ழில் முயற்சி செய்­வோர் பெற்­றுக் கொண்ட வங்­கிக் கடனை இல்­லா­மல் செய்­ய­வேண்­டும், ஆகக் குறைந்­தது அதற்­கான வட்­டி­யை­யா­வது இல்­லா­மல் செய்­ய­வேண்­டும் என்­றும் கேட்­கப்­பட்­டது.

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­துக்கு இப்­போ­தும் 3 ஆயி­ரம் மெற்­றிக் தொன்­னு­டன் கப்­பல் வர­மு­டி­யும். துறை­மு­கத்­தைப் பயன்­பாட்­டுக்கு அனு­ம­தித்­தால் வடக்­கில் வர்த்­த­கம் விரி­வா­கும் என்­ப­தும் சந்­திப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

கூட்­டு­ற­வுத் துறை

போரி­னால் கூட்­டு­ற­வுத்­துறை வலு­வி­ழந்­து­விட்­டது, எனவே வங்­கி­கள் ஊடாக வழங்­கப்­ப­டும் வாழ்­வா­தா­ரக் கடன்­களை, கூட்­டு­றவு வங்­கி­கள் ஊடாக வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­கிற கோரிக்கை நிதி அமைச்­ச­ரி­டம் நேரில் முன்­வைக்­கப்­பட்­டது.

கடற்­தொ­ழில் கூட்­டு­றவு அமைப்­புக்­கள் கட­லில் பல நாள்­கள் தங்­கி­யி­ருந்து மீன்­பி­டி­யில் ஈடு­ப­டத்­தக்க கப்­பல்­கள் தமக்­குத் தேவை என்று கோரிக்கை முன்­வைத்­தன. அதற்கு நிதி அமைச்­சர், தமது அமைச்­சின் ஊடாக மீன்­பிடி அமைச்­சுக்கு விண்­ணப்­பங்­களை அனுப்­பு­மா­றும், பல­நாள் கப்­பல்­களை 50 வீத மானி­யத்­து­டன் பெற்­றுக் கொள்ள முடி­யும் என்­றும் பதி­ல­ளித்­துள்­ளார்.

வடக்­கில் ஒரு நாளைக்கு 6 ஆயி­ரம் லீற்­றல் பால் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும், மேலும் உற்­பத்­தியை அதி­க­ரிக்க முடி­யும் என்­றும், பாலைச் சேமிப்­ப­தற்­கும், பால் உற்­பத்­திப் பொருள்­க­ளைச் செய்­வ­தற்­கு­மான உத­வி­கள் தேவை என்­றும் பால் உற்­பத்தி கூட்­டு­றவு அமைப்­புக்­கள் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. அதற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு உதவி

முன்­னாள் போரா­ளி­க­ளுக்­குத் தொழில் வழங்­கு­மாறு கூட்­டு­ற­வுத்­து­றை­யி­னர் மற்­றும் வர்த்­த­கர்­க­ளி­டம் இந்­தச் சந்­திப்­பில் அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார். அப்­படி முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சம்­ப­ளத்­தின் அரை­வா­சித் தொகையை நிதி அமைச்சு தொழில் தரு­ந­ருக்கு திருப்­பித் தரும் என்று அமைச்­சர் உத்­த­ர­வா­தம் அளித்­தார். வரவு – செல­வுத் திட்­டத்­தில் ஏற்­பா­டு­கள் உள்­ள­தை­யும் விளக்­கி­னார். இந்த நிதியை மாவட்­டச் செய­லர் ஊடாக தொழில் தரு­நர்­கள் பெற்­றுக் கொள்ள முடி­யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*