ranil-wickremesinghe-1

ரணிலின் பதவிக்கு சிக்கல்?!

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவை புதிய பிரதமராக நியமிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அவருக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சிகளே தற்போது இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக பிரதமர் தொடர்பான குழப்பங்கள் நீடித்து வருகின்ற நிலையில், பிரதமரருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எதுவித தகவல்கள் வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்து வருகின்றார்.

எவ்வாறாயினும், தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள பிரதமர் ரணில், பதவி விலகுவதே கட்சிக்கும் ஆட்சிக்கும் சிறந்தது என கட்சி முக்கியஸ்தர்களும் கூறி வருகின்ற நிலையில், பிரதமர் ரணில் எதிர்வரும் சில தினங்களுக்குள் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*